இலங்கையின் பிரதமராக கலாநிதி ஹரினி அமரசூரிய மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் தற்பொழுது அமைச்சர்கள் பதவிப் பிரமாணம் செய்து கொண்டு வருகின்றனர்.
கடந்த 14ம் திகதி நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஹரினி கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்டார்.
இதன் போது ஹரினி அமரசூரிய சுமார் ஆறரை லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்குகளை பெற்றுக்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி ஆகிய அமைச்சுப் பொறுப்புக்களும் ஹரினிக்கு வழங்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முன்னிலையில் அவர் இவ்வாறு பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.