இலங்கையின் மக்களினால் தமக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் எல்லைகளை நன்கு அறிந்து வைத்திருப்பதாக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
புதிய அமைச்சரவை நியமனத்தின் பின்னர் ஆற்றிய உரையின் போது அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
அதிகாரத்தை மையப்படுத்திய அமைச்சரவையின் பொறுப்புக்கள் எவ்வாறு முன்னெடுக்கப்படுகின்றது என்பதை பொறுத்து அரசாங்கம் ஒன்று வெற்றி பெற்றதா அல்லது தோல்வி அடைந்ததா என்பது நிர்ணயம் செய்யப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
தேர்தல் முடிவானது ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்கான குரல் என அவர் தெரிவித்துள்ளார்.
அனைத்து துறைகளிலும் பூரண சுதந்திரத்தை உறுதி செய்ய செய்யவும் சமாதானத்தையும் சட்டத்தையும் நிலை நாட்டவும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
தனது மதம் மொழி கலாச்சாரத்திற்கு அமைய சுதந்திரமாக செயல்படுவதற்கான உரிமையும் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இலங்கை வாழ் மக்களுக்கு இதனை விடவும் சுதந்திரமான ஒரு நாட்டை உருவாக்கிக் கொடுக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
தேர்தலில் கிடைக்கப்பெற்ற வெற்றியில், பொது மக்களின் பங்களிப்பு அளப்பரியது கட்சி செயற்பாட்டாளர்கள் தவிர்த்து பொதுமக்கள் பெருமளவு இந்த வெற்றியில் பங்களிப்பினை வழங்கியிருந்தனர் என அவர் தெரிவித்துள்ளார்.
பெயர் தெரியாத ஊர் தெரியாத பலர் தமது கட்சி வெற்றிக்காக அயராது உழைத்திருந்தனர் எனவும் அவர்கள் அனைவருக்கும் நன்றி பாராட்டுவதாகவும் தெரிவித்துள்ளார்.
அதிகாரம் மக்களுக்கு எதிராக பல்வேறு சந்தர்ப்பங்களில் பயன்படுத்தப்பட்டது எனவும் எதிர்காலத்தில் அவ்வாறான நிலைமைகளுக்கு இடமில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.