ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான மூன்று விமானங்கள் ஒரே நேரத்தில் இயந்திரக் கோளாறுகளுக்கு உள்ளாகியுள்ளன.
இதனால் குறித்த மூன்று விமானங்களினதும் பயணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இந்த மூன்று விமானங்களை தவிர்ந்த மேலும் விமானங்களும் இயந்திரக் கோளாறு காரணமாக பயணங்களை ரத்து செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அனைத்து விமானங்களும் விமான பயணம் ஒன்றின் இறுதியில் தொழில்நுட்ப மதிப்பாய்விற்கு உட்படுத்தப்படும்.
இவ்வாறு மதிப்பாய்வு செய்யப்படும் போது சில விமானங்களில் காணப்படும் தொழில் நுட்பக் கோளாறுகள் காரணமாக அவை மீண்டும் பயணங்களை மேற்கொள்ள சிறிதளவு கால அவகாசம் தேவைப்படும்.
இவ்வாறு தொழில்நுட்பக் கோளாறுக்கு உள்ளான மூன்று விமானங்கள் பழுது பார்க்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அண்மைக்காலமாக ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான பல்வேறு விமானங்கள் தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக பாதிக்கப்பட்டு பயணங்கள் ரத்து செய்யப்பட்டு வருகின்றன.
இதனால் பயணிகள் பெரும் அசோகரியங்களை எதிர் நோக்க நேரிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.