முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் வீட்டின் எதிரில் கடுமையான போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
புதிய ஜனநாயக முன்னணியின் தேசிய பட்டியல் உறுப்பினராக ரவி கருணாநாயக்கவின் பெயர் வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டது.
இவ்வாறு தேசிய பட்டியலில் ரவி கருணாயாநயக்கவின் பெயர் குறிப்பிடப்பட்டமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சி இது தொடர்பில் நேரடியான எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.
கட்சியின் விசாளர் வஜிர அபேவர்தன இந்த நியமனத்திற்கு கடுமையான எதிர்ப்பை வெளியிட்டியுள்ளதுடன் ஐக்கிய தேசிய கட்சியின் அனுமதி இன்றி இந்த பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ரவி கருணாநாயக்கவின் இந்த தீர்மானத்திற்கு எதிர்ப்பு வெளியிட்டு அவரது வீட்டை முற்றுகையிட வேண்டும் என கொழும்பு மாநகர சபையின் முன்னாள் மேயர் அசாத் சாலி தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் குறித்த பகுதியில் இன்று ஏதும் அசம்பாவிதங்கள் இடம்பெறக்கூடும் என்ற காரணத்தினால் பொலிஸார் குறித்த பகுதிக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, ரவி கருணாநாயக்க ஐக்கிய தேசியக் கட்சியின் உருப்புரிமையிலிருந்து நீக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கட்சியின் கொள்கைகளுக்கு புறம்பான வகையில் ரவி கருணாநாயக்க செயற்பட்டார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.