அமெரிக்காவின் விமான சேவை நிறுவனங்களில் ஒன்றான ஸ்பிரிட் விமான சேவை நிறுவனம் வங்குரோத்து அடைந்துள்ளதாக அறிவித்துள்ளது.
பாரியளவு நட்டம் அடைந்துள்ளதாகவும் கடன்களை செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
ஏனைய விமான சேவை நிறுவனங்களினால் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் சேவைகளை போட்டித் தன்மையுடன் வழங்க முடியவில்லை என விமான சேவை நிறுவனம் தெரிவித்துள்ளது.
எவ்வாறெனினும், தொடர்ந்து சேவையை வழங்க திட்டமிட்டுள்ளதாகவும் பயணிகள் விமான பயணங்களுக்காக பதிவு செய்து கொள்ள முடியும் எனவும் ஏற்கனவே பதிவு செய்து கொண்ட விமான டிக்கெட்டுகளை பயன்படுத்த முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் விமான சேவை நிறுவனங்கள் மற்றும் ஏனைய நிறுவனங்கள் இவ்வாறு வங்குரோத்து நிலையை அறிவித்து பின்னர் கடன் மறுசீரமைப்பு மேற்கொண்டு வலுவான நிலைக்கு மீண்டு சந்தர்ப்பங்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்காவின் முன்னணி விமான சேவை நிறுவனங்களான அமெரிக்கன் ஏர்லைன்ஸ் யுனைடெட் மற்றும் டெல்டா போன்ற விமான சேவை நிறுவனங்களும் கடந்த 25 ஆண்டுகளில் வங்குரோத்து நிலையை அறிவித்து பின்னர் மீண்டு வந்து நிலமை குறிப்பிடத்தக்கது.
கடன் தரவுனர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் கடன்களை முகாமைத்துவம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.