அமெரிக்கா மற்றும் பிரித்தானியாவின் ஆயுதங்களைக் கொண்டு உக்ரைன் படையினர் ரஸ்யா மீது தாக்குதல் நடத்துவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அமெரிக்காவினதும் பிரித்தானியாவினதும் நீண்ட தூர ஏவுகணைக் கொண்டு ரஸ்ய இலக்குகள் மீது உக்ரைன் தாக்குதல் நடத்துவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
பிரித்தானியா வழங்கிய ஸ்ட்ரோம் செடோவ் என்ற நீண்ட தூர ஏவுகணையை உக்ரைன் பயன்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த ஆயுத பயன்பாடு குறித்து பிரித்தானியா இதுவரையில் எவ்வித கருத்தும் வெளியிடவில்லை.
இதேவேளை, அமெரிக்காவின் நீண்டதூர ஏவுகணைகளையும் உக்ரைன் பயன்படுத்தி தாக்குதல் நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, ரஸ்யா உளவியல் ரீதியான போரில் ஈடுபட்டு வருவதாக உக்ரைன் குற்றம் சுமத்தியுள்ளது.
பாரியளவில் உக்ரைன் மீது தாக்குதல் நடத்தியதாக போலிப் பிரச்சாரம் செய்து இவ்வாறு உளவியல் ரீதியான போரில் ஈடுபட்டு வருவதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
மேலும், உக்ரைனுக்கு நிலக்கண்ணி வெடிகளை வழங்குவதற்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இணக்கம் வெளியிட்டுள்ளார்.
அமெரிக்கா மற்றும் பிரித்தானிய ஆயுதங்களைக் கொண்டு ரஸ்யா மீதான தாக்குதல்கள் மோதல்களை உக்கிரமடையச் செய்யும் என அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.