உக்ரைனுக்கு எதிரான போரை ரஸ்யா நிறுத்திக்கொள்ள வேண்டுமென சுவிட்சர்லாந்து அரசாங்கம் கோரியுள்ளது.
சுவிட்சர்லாந்து வெளிவிவகார அமைச்சர் இக்னேசியோ காஸீஸ் இந்த விடயத்தை வலியுறுத்தியுள்ளார்.
ஐக்கிய நாடுகள் பாதுகாப்புப் பேரவையில் உரையாற்றிய போது அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
அண்மைய நாட்களாக உக்ரைனின் சக்தி வள கட்டமைப்புக்கள் மீது ரஸ்யா தீவிர தாக்குதல்களை நடத்தி வருகின்றது.
இவ்வாறான தாக்குதல்கள் குளிர்காலத்தில் பொதுமக்களுக்கு பெரும் அச்சுறுத்தல்களை ஏற்படுத்தும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த தாக்குதல்கள் அணுவாயுத அச்சுறுத்தல்களை மட்டுமன்றி உணவுப் பாதுகாப்பின்மையையும் ஏற்படுத்துகின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வடகொரிய படையினர் இந்த போரில் பங்கேற்றுள்ளமை இந்தப் போர் உலக அளவில் வியாபிக்கக்கூடிய அச்சுறுத்தல்களை உருவாக்கியுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.