உலகின் மிகப்பெரிய பயணிகள் விமானம் கட்டுநாயக்க பண்டாராயக்க சர்வதேச விமானத்தை சென்றடைந்துள்ளது.
கட்டார் விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான எயார் பஸ் A380 விமானமே இவ்வாறு நேற்று இரவு கொழும்பை சென்றடைந்துள்ளது.
இந்த விமானம் உலகின் மிகப்பெரிய பயணிகள் விமானங்களில் ஒன்றாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
அவுஸ்திரேலியாவின் சிட்னி விமான நிலையத்திலிருந்து வந்த இந்த விமானம் எரிபொருள் நிரப்புதல் உள்ளிட்ட சில நடவடிக்கைகளுக்காக இலங்கையில் தரையிறக்கப்பட்டுள்ளது.