காசாவில் போர் நிறுத்தம் அமுல்படுத்துவது குறித்து ஐக்கிய நாடுகள் பாதுகாப்புப் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்ட தீர்மானத்தை அமெரிக்கா எதிர்த்துள்ளது.
இந்த தீர்மானத்திற்கு ஐக்கிய நாடுகள் பாதுகாப்புப் பேரவையின் 14 உறுப்பு நாடுகள் ஆதரவினை வெளியிட்டுள்ளன.
எனினும் அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி தீர்மானத்தை எதிர்த்துள்ளது.
காசாவில் நிபந்தனையற்ற போர் நிறுத்தத்திற்கு ஆதரவளிக்கப் போவதில்லை என அமெரிக்கா தெரிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கான அமெரிக்க பிரதித் தூதுவர் ரொபர்ட் வுட் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலிய பணயக் கைதிககளை விடுதலை செய்வதன் மூலம் நிரந்தரமான போர் நிறுத்தமொன்றை அமுல்படுத்த முடியும் என அவ சுட்டிக்காட்டியுள்ளார்.
போர் நிறுத்தம் குறித்து சமர்ப்பிக்கப்பட்ட தீர்மானத்தில் ஹமாஸ் இயக்கத்தின் செயற்பாடுகளை கண்டிப்பதற்கான எந்தவொரு விடயங்களும் உள்ளடக்கப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, இஸ்ரேலிய படையினர் தொடர்ச்சியாக காசா மீது தாக்குதல்களை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.