இலங்கையின் பத்தாம் நாடாளுமன்றின் சபாநாயகராக கலாநிதி அசோக்க ரன்வல தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
அரசியலுக்கு அப்பாற்பட்ட வகையில் அனைவரும் ஒன்றிணைந்து மக்களின் அபிலாசைகளை பூர்த்தி செய்ய செயல்பட வேண்டும் என சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றின் கௌரவத்தையும், சுயாதீன தன்மையும் முழுமையாக பாதுகாக்க அர்ப்பணிப்புடன் செயல்பட போவதாக அவர் தெரிவித்துள்ளார்.
அனைத்து உறுப்பினர்களின் உரிமைகளையும் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
அசோக்க ரன்வெல ஏக மனதாக சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, பிரதிசபாநாயகராக கலாநிதி ரிஸ்வி சாலிஹ் நியமிக்கப்பட்டுள்ளார்.
சபாநாயகரும் பிரதி சபாநாயகரும் தேசிய மக்கள் சக்தியின் புதிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.