கடந்த அரசாங்கங்களில் அங்கம் வகித்த பல முக்கிய அமைச்சர்கள் பிரதி அமைச்சர்களிடம் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பான விசாரணைகள் இவ்வாறு ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதல் சம்பவம் தொடர்பில் பிரித்தானியாவின் செனல்4 ஊடகம் வெளியிட்ட காணொளி தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அதன் ஒரு கட்டமாக முன்னாள் ராஜாங்க அமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசத்துரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையானிடம் இன்றும் விசாரணை நடத்தப்படுகின்றது.
குற்றப்புலனாய்வுத் துறையினர் இந்த விசாரணைகளை முன்னெடுக்கின்றனர்.
பிள்ளையானிடம் ஏற்கனவே விசாரணை நடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதலுடன் பிள்ளையான் தரப்புக்கு தொடர்பு உண்டு என பிள்ளையானின் முன்னாள் ஊடகப் பேச்சாளர் அசாத் மவுலானா தெரிவித்திருந்தார்.
தற்பொழுது சுவிட்சர்லாந்தின் அரசியல் தஞ்சம் பெற்றுள்ள அசாத் மவுலானா இந்த தகவல்களை செனல்4 ஊடகத்திற்கு வழங்கியிருந்தார்.
இவ்வாறு பல்வேறு அரசியல்வாதிகளிடம் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
தரமற்ற மருந்து பொருள் உற்பத்தி தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
முன்னாள் அமைச்சர்களான பிரசன்ன ரணதுங்க, ரமேஷ் பாத்திரன மற்றும் ரோஷான் ரணசிங்க ஆகியோர் நேற்றைய தினம் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் வாக்குமூலம் அளித்திருந்தனர்.
இவ்வாறு பல்வேறு முக்கியஸ்தர்களிடம் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பினை ஏற்றுக் கொண்டதன் பின்னர் விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கடந்த காலங்களில் இடம்பெற்ற பல்வேறு பாரிய குற்ற செயல்கள் மற்றும் ஊழல் மோசடிகள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டு குற்றம் இழைத்தவர்களுக்கு தண்டனை விதிக்கப்படும் என தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் உறுதிமொழி வழங்கியுள்ளமை என்பதை குறிப்பிடத்தக்கது.