உக்ரைன் ரஸ்ய போர் காரணமாக உலக நாடுகளுக்கு இடையில் போர் மூழக்கூடிய அபாய நிலை உருவாகியுள்ளது.
நேற்றைய தினம் ரஷ்யா அணு ஆயுதங்களை பயன்படுத்தக்கூடிய கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை பயன்படுத்தி உக்கிரன் மீது தாக்குதல் நடத்தியிருந்தது.
இந்த தாக்குதலானது உலக நாடுகள் மத்தியில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்யாவிற்கும் மேற்குலக நாடுகளுக்கும் இடையில் போர் மூழக் கூடிய அபாய நிலை உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நேற்றைய தினம் ஒலியை விடவும் 10 மடங்கு வேகமாக செல்லக்கூடிய ஏவுகணைகளை ரஷ்யா பயன்படுத்தி இருந்தது.
நீண்ட இடைவேளையின் பின்னர் ரஷ்யா அதிபர் விளாடிமிர் புட்டின் தொலைக்காட்சியில் தோன்றி உரையாற்றியிருந்தார்.
உக்ரைன் மீது தாக்குதல் நடத்துவதற்கு நேற்றைய தினம் பயன்படுத்தப்பட்ட ஆயுதம் இதற்கு முன்னர் போர்களில் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் அல்ல என தெரிவிக்கப்படுகிறது.