சுவிட்சர்லாந்தில் நேற்றைய தினம் முதல் கடுமையான பனிப்பொழிவு நிலையை அவதானிக்க முடிகின்றது.
இந்த இன்றும் நீடிக்கும் என தெரிவிக்கப்படுகிறது.
சில பகுதிகளில் நேற்றைய தினம் சுமார் 20 சென்டிமீட்டர் வரையில் பனிப்பொழிவு காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனால் சில இடங்களில் பொதுப் போக்குவரத்து ஸ்தம்பிதம் அடைந்ததாகவும் பயணிகள் பெரும் சிரமங்களை எதிர் நோக்க நேரிட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இன்றைய தினம் இரவு கடும் பனிப்பொழிவு ஏற்படும் எனவும் தாழ் நிலப் பகுதியில் வானம் இருண்ட நிலையில் காணப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
மலைப்பகுதிகளில் அடிக்கடி பனி மழை பெய்யக்கூடிய சந்தர்ப்பம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
வெப்பநிலை காணப்படும் எனவும் சில பகுதிகளில் பலத்த காற்று வீசும் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.
பனி படர்ந்த பகுதிகளில் போக்குவரத்து செய்வதில் சிரமங்கள் ஏற்படக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எனவே வாகனங்களை செலுத்துவோர் மிகுந்த எச்சரிக்கையுடன் வாகனங்களை செலுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சில இடங்களில் ரயில் பயணங்கள் ரத்து செய்யப்பட கூடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறெனினும், வார இறுதி நாட்களில் காலநிலையில் மாற்றம் ஏற்பட்டு ஓரளவு வெப்பநிலை அதிகரிக்கும் எனவும் ஞாயிறன்று தெளிவந்த வானத்தை பார்க்க முடியும் எனவும் எதிர்வுகூறப்பட்டுள்ளது.