இந்தியா சினிமா கிரிக்கெட் போன்ற துறைகளில் ஜொலிக்கும் நட்சத்திர பட்டாளத்தில் மெய்மறந்து கொண்டாடும் நாடு என்றால் அது மிகப்படாது.
பொதுவாக இந்தியாவில் சினிமா மற்றும் கிரிக்கெட் துறை தொடர்பான மக்கள் மத்தியிலான ஆர்வம் வெகு அதிகம் இவ்வாறான ஓர் பின்னணியிலும் இந்தியாவின் தமிழ்நாட்டில் பெரும் எண்ணிக்கையிலான சதுரங்க விளையாட்டு வீரர்கள் உருவாகி உலகப் புகழ் பெற்று வருகின்றனர்.
இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற சதுரங்க வீரர்கள் கொண்ட மாநிலமாக தமிழ்நாடு காணப்படுகின்றது.
அந்த வகையில் தற்பொழுது 18 வயதான கோகுலேஸ் தொமாராஜு என்பவர் தற்பொழுது சதுரங்க போட்டியில் உலகம் வெல்லும் புது நட்சத்திரமாக உருவாகி வருகின்றார்.
அவரது அபார திறமையை பாராட்டும் வகையில் அவரது பாடசாலை புதிய வாகனம் ஒன்றை அன்பளிப்பாக வழங்கியுள்ளது
இந்தியாவில் 85 கிரான்ட் மாஸ்டர் சதுரங்க வீரர்கள் உள்ளனர் இதில் 31 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சிங்கப்பூரில் நடைபெறும் உலக சதுரங்க சாம்பியன்ஸ்சிப் போட்டிகளில் குகேஸ் இந்தியாவை பிரதிநிதித்துவம் செய்ய உள்ளார்.
நடப்பு உலக சாம்பியனான சீன வீரர் டிங் லியர்னை குகேஸ் எதிர்கொள்ள உள்ளார்.
உலகின் புகழ்பூத்த பல சதுரங்க வீரர்கள் வேளம்மாள் நெக்ஸஸ் கல்லூரியில் (Velammal Nexus school) பயிற்சி பெற்றுக்கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
குகேஸ், பிக்ஞானந்தா, வைஷாலி மற்றும் அர்ஜூன் கல்யாண் போன்றவர்களும் இந்த கல்லூரியில் கற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
56 வயதான வல்லவன் சுப்பையா என்ற நபரே கல்லூரியில் மாணவர்களுக்கு பயிற்சி வழங்குகின்றார்.
கடந்த காலங்களில் சதுரங்க பயிற்சி பெற்றுக்கொண்ட மாணவர்களின் எண்ணிக்கையை விடவும் தற்பொழுது எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது.
தமிழகத்தைச் சேர்ந்த பல இளம் வீர வீராங்கனைகள் பல்வேறு உலக சாதனைகளை சதுரங்க ஆட்டங்களில் வெளிப்படுத்தி வருகின்றனர்.