சுவிட்சர்லாந்தில் வீதிகளை விஸ்தரிப்பது குறித்த யோசனை நிராகரிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் இன்றைய தினம் சில முக்கியமான விடயங்கள் தொடர்பில் பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
இந்த வாக்கெடுப்பின்போது வீதிகளை விஸ்தரிக்கும் யோசனையை மக்கள் நிராகரித்துள்ளனர்.
வாக்களிப்பில் பங்கேற்ற 52 வீதமானவர்கள் வீதிகளை விஸ்தரிக்க வேண்டியதில்லை என வாக்களித்துள்ளனர்.
ஐந்து பில்லியன் சுவிஸ் பிராங்குகள் முதலீட்டில் வீதிகள் விஸ்தரிக்க திட்டமிடப்பட்டிருந்தது.
எனினும், சுவிட்சர்லாந்து மக்கள் இந்த யோசனையை நிராகரித்துள்ளனர்