ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க, பிரதமர், அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சம்பளம் பெற்றுக்கொள்ள மாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய மக்கள் சக்தியின் அனைத்து மக்கள் பிரதிநிதிகளும் இவ்வாறு சம்பளம் பெற்றுக்கொள்வதில்லை என தீர்மானித்துள்ளதாக கடற்றொழில் வள பிரதி அமைச்சர் ரத்ன கமகே தெரிவித்துள்ளார்.
அனைவரினதும் சம்பளங்கள் பொது நிதியமொன்றில் வைப்புச் செய்யப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றிற்கு தெரிவான 159 பேரும் சம்பளம் பெற்றுக்கொள்ளாது மக்களுக்கு சேவையாற்ற உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இந்த பொது நிதியத்தின் ஊடாக திரட்டப்படும் பணம் மூலமாகவும் மக்களுக்கு சேவைகள் வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எந்தவொரு சிறப்புரிமைகளையும் பெற்றுக்கொள்ளப் போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.