இலங்கையில் காலநிலை தொடர்பில் சிகப்பு எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இலங்கையை சுற்றியுள்ள கடல் பரப்பு, கரையோரம் மற்றும் நிலப்பரப்பு என்பனவற்றில் இவ்வாறு சீரற்ற காலநிலை நிலவும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாளைய தினம் பிற்பகல் 4.00 மணி வரையில் இந்த சிகப்பு எச்சரிக்கை அறிவிப்பு அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்களாவிரிகுடாவில் தென்மேற்குப் பகுதியில் ஏற்பட்டுள்ள தாழமுக்க நிலையினால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாட்டின் வடக்கு பகுதியில் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
மேலும் பதுளை, காலி, மாத்தறை, கேகாலை, நுவரெலியா மற்றும் ரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் சீரற்ற காலநிலை தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.