சர்வதேச நாணய நிதியத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை கிழித்தெறிய முடியாது என தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
கட்சியின் சிரேஸ்ட உறுப்பினரும், பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சருமான சமந்த வித்யாரத்ன தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து நாட்டுக்கு என்ன கிடைக்குமோ அதை பெற்றுக் கொடுக்க தயாராக இருப்பதாகவும் அவர் கூறுகிறார்.
ஆனால் கைச்சாத்திடப்பட்டுள்ள உடன்படிக்கைகளில் சில திருத்தங்களை மேற்கொள்ள வேண்டியுள்ளதாகவும் அதற்கான சில கலந்துரையாடல்கள் தற்போது இடம்பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், தற்போது சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து அடுத்த கடன் தவணையை பெற்றுக்கொள்வதில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது என்றார்.