ஹிஸ்புல்லா இயக்கத்துடன் போர் நிறுத்தம் செய்வது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
ஹிஸ்புல்லாவுடனான போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேலிய பிரதமர் பென்ஜமின் நெட்டன்யாகூ கொள்கை ரீதியான இணக்கத்தை வெளியிட்டுள்ளார்.
இந்த போர் நிறுத்த யோசனையில் சில விடயங்கள் தொடர்பில் இன்னமும் உடன்பாடு எட்டப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அனைத்து விதமான விடயங்கள் தொடர்பிலும் இணக்கப்பாடு ஏற்படுத்திக்கொள்ளப்பட்டால் மட்டுமே போர் நிறுத்த உடன்படிக்கை கைச்சாத்திடப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் படையினருக்கும் ஹிஸ்புல்லா இயக்கத்திற்கும் இடையில் போர் நிறுத்தத்தை அமுல்படுத்தும் முனைப்புக்களில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளது.