அமைச்சரவைக்கு மிகவும் தகுதியானவர்களை நாம் நியமித்துள்ளோம் என அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்திருந்தார்.
முஸ்லிம் மக்களுக்கு அமைச்சரவையில் வாய்ப்பு வழங்காமை குறித்து ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ கருத்து தெரிவித்திருந்தார்.
அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்;
“.. அமைச்சரவைக்கு மிகவும் தகுதியானவர்களை நாம் நியமித்துள்ளோம். அங்கு ஜாதி இனம் குலத்திற்கு நாம் முக்கியத்துவம் வழங்கவில்லை.
உண்மையில் நாம் மேல்மாகாண ஆளுநராக முஸ்லிம் வியாபாரி ஒருவரை நியமித்தோம். பிரதி சபாநாயகர், பிரதி அமைச்சர், கம்பஹா மாவட்டத்தில் இருந்து ஒரு முஸ்லிம் நபரை நாம் நாடாளுமன்ற உறுப்பினராக தேசியப்பட்டியலில் உள்வாங்கி இருக்கிறோம்.
உண்மையில் எங்களுக்கு இலங்கை தேசம் தான் இங்கு முக்கியம். அதனையே நாம் பாதுகாக்கிறோம். அதற்காக இனவாதத்தையோ, சாதி, குலம், இனத்தையோ நாம் பாதுகாப்பதில்லை. இலங்கை தேசத்திற்கு தான் முக்கியத்துவம் வழங்குவோம். அதில் எல்லாவற்றுக்கும் பதில் உண்டு. முஸ்லிம் மக்களுக்காக நாம் நிற்போம், முஸ்லிம் மக்களிடமும் அதையே கேட்டுக் கொள்கிறோம்..” என அவர் தெரிவித்துள்ளார்.