நாட்டில் நிலவிவரும் சீரற்ற காலநிலை காரணமாக கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் மூன்று நாட்களுக்கு பரீட்சைகளை நடத்துவதில்லை என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜெயசுந்தர இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 27, 28 மற்றும் 29 ஆகிய நாட்களுக்கு பரீட்சை நடைபெறாது என தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 30ம் திகதி தொடக்கம் பரீட்சைகள் நடைபெறும் என தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் ஒத்தி வைக்கப்பட்ட பரீட்சைகள் எதிர்வரும் டிசம்பர் மாதம் 21, 22 மற்றும் 23ம் திகதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.