இலங்கையில் நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக விமானப் பயணங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இன்றைய தினம் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கப்படவிருந்த ஆறு விமானங்கள் திசை திருப்பப்பட்டுள்ளன.
மூன்று விமானங்கள் மத்தள விமான நிலையத்திற்கும் மூன்று விமானங்கள் இந்தியாவின் திருவனந்தபுரம் விமான நிலையத்திற்கும் திசை திருப்பப்பட்டுள்ளன.
விமான பயணிகள் விமான நிலையத்தின் பயண அறிவிப்புக்கள் குறித்து அவதானத்துடன் இருக்குமாறு கட்டுநாயக்க விமான நிலையம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.
நாடு முழுவதிலும் நிலவி வரும் சீரற்ற காலநிலையினால் பெரும் பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன.