இலங்கையில் சீரற்ற காலநிலை காரணமாக பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சீரற்ற காலநிலை காரணமாக ஒருவர் உயிரிழந்து உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் சுமார் 70 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழமுக்க நிலை காரணமாக இவ்வாறு கடுமையான மழை பெய்து வருகிறது.
நாட்டின் 15 மாவட்டங்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஆறு வீடுகள் முற்றாக செய்தமடைந்துள்ளதுடன் 265 வீடுகள் பகுதி அளவில் சேதமடைந்துள்ளன.
சீரற்ற காலநிலை அனர்த்தம் காரணமாக ஐந்து பேர் காயமடைந்துள்ளனர்.
சுமார் 3000 பேர் இருப்பிடங்களை இழந்து தற்காலிக இடங்களில் தங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நாட்டின் பிரதான குளங்கள் அனைத்தினதும் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த பகுதியில் வாழும் மக்கள் குறிப்பாக தாழ்நிலப் பகுதிகளில் வாழும் மக்கள் திடீர் வெள்ளம் ஏற்படக்கூடிய அபாயம் குறித்து எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
சீரற்ற காலநிலை காரணமாக கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் மூன்று தினங்களுக்கு பரீட்சைகள் நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் நாட்டின் 10 மாவட்டங்களில் மண் சரிவு அபாய எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளது.