அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவாகியுள்ள டொனால்ட் டிரம்ப் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தாம் கடமைகளை பொறுப்பேற்கும் முதல் நாளிலேயே சில நாடுகளின் பொருட்கள் மீது வரி விதிக்கப்படும் என அறிவித்துள்ளார்.
கனடா மெக்சிகோ ஆகிய நாடுகளில் இருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது வரி விதிக்கப்படும் என அறிவித்துள்ளார்.
இந்த நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது சுமார் 25 வீதம் அளவில் வரி விதிக்கப்படும் என டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
தனது எக்ஸ் தளத்தில் இது தொடர்பிலான அறிவிப்பினை அவர் வெளியிட்டுள்ளார்.
தனது நிறைவேற்று அதிகாரத்தை பயன்படுத்தி இவ்வாறு விசேட சட்டத்தை அமுல்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளார்.
இது கனடா போன்ற நாடுகளின் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்படுகிறது.
சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு ஏற்கனவே விதிக்கப்பட்டுள்ள வரியை விடவும் கூடுதலாக மேலும் 10 வீத வரி அறவீடு செய்யப்படும் என ட்ரம்ப் மேலும் தெரிவித்துள்ளார்.