விமான சேவை நிறுவனங்கள் மோசடியான முறையில் பாரியளவில் கட்டணங்களை அறவீடு செய்வதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அமெரிக்க காங்கிரஸ் சபையினால் இந்தக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
“junk fees” என்றழைக்கப்படும் கட்டணங்களின் ஊடாக இவ்வாறு பெருந்தொகை பணம் வாடிக்கையாளர்களிடமிருந்து பறிக்கப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
விமானப் பயணிகள் ஆசனமொன்றை தெரிவு செய்வதற்கும் பயணப் பொதி ஒன்றை எடுத்துச் செல்வதற்கும் இவ்வாறு கூடுதல் கட்டணங்கள் அறவீடு செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
சில விமான சேவை நிறுவனங்கள் பயணப் பொதியை கையில் எடுத்துச் செல்லும் பயணிகள் கட்டணம் செலுத்தினார்களா என்பதை கண்காணிக்க பணியாளர்களை பணிக்கு அமர்த்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறான பயணிகளை கண்டு பிடிக்கும் பணியாளர்களுக்கு கொடுப்பனவு வழங்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 2012ம் ஆண்டு முதல் 2023ம் ஆண்டு வரையிலான காலப் பகுதியில் அமெரிக்காவின் ஐந்து விமான சேவை நிறுவனங்கள் ஆசனங்களை தெரிவு செய்யும் வாடிக்கையாளர்களிடமிருந்து 12 பில்லியன் டொலர்களை கட்டணமாக அறவீடு செய்துள்ளது.
இவை விமான பயணச்சீட்டு கட்டணங்களுடன் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
பெற்றோர் பிள்ளைகளுடன் ஒன்றாக அமர்தல், ஜன்னல் ஓரத்தில் அமர்வதற்கு உள்ளிட்ட பல்வேறு ஆசன ஒதுக்கீடுகளுக்கு விமான சேவை நிறுவனங்கள் நியாயமற்ற வகையில் கட்டணங்களை அறவீடு செய்வதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அமெரிக்க செனட் சபையின் துணைக்குழுவொன்று இந்த மோசடிகள் குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.