இஸ்ரேலியா படையினருக்கும் ஹிஸ்புல்லாஹ் போராளிகளுக்கும் இடையிலான போர் நிறுத்தம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
லெபனானில் இந்த போர் நிறுத்தம் அமுல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சிரிய எல்லை பகுதியில் போர் காரணமாக ஏற்பட்ட கடந்த ஒரு ஆண்டு காலமாக ஹிஸ்புல்லா மற்றும் இஸ்ரேல் படையினருக்கு இடையில் மோதல்கள் இடம் பெற்று வந்தன.
எல்லை தாண்டி இந்த தாக்குதல்கள் இடம் பெற்றன.
இந்த தாக்குதல் சம்பவங்களில் ஆயிரக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
போர் நிறுத்தம் சுமார் 60 நாட்கள் நடைமுறையில் இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது.
இந்த காலப்பகுதியில் நிரந்தர போர் நிறுத்தம் ஒன்றை அமல்படுத்துவது குறித்து பேச்சு வார்த்தைகள் முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.