சுவிஸ் விமான சேவை நிறுவனம் புதிய விமான சேவையொன்றை ஆரம்பித்துள்ளது.
நீண்ட தூர பயணங்களின் போது சுற்றுச் சூழலுக்கு சாதகமான வகையில் பயணம் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
விமானப் பயணிகள் சுற்றுச் சூழலுக்கு பாதகமற்ற வகையில் விமானப் பயணங்கள் மேற்கொள்ளப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்வரும் டிசம்பர் மாதம் 4ம் திகதி முதல் இந்த புதிய விமான சேவை ஆரம்பிக்கப்பட உள்ளது.
கார்பன் வெளியீட்டு அளவிற்கான கட்டணத்தை உள்ளடக்கியதாக விமான டிக்கட்டுகளுக்கான கட்டணங்கள் அறவீடு செய்யப்பட உள்ளது.
சுற்றுச் சூழலுக்கு சாதகமான வகையிலான குறுகிய தூர விமானப் பயணங்கள் கடந்த 2022ம் ஆண்டு முதல் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.