யாழ்ப்பாணம் V9 வீதி நீரில் மூழ்கியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் நிலவி வரும் சீரற்ற காலநிலையினால் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
குறிப்பாக வடக்கு கிழக்கு மாகாணங்களில் அதிக அளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
ஏ 9 ஓமந்தை பகுதி நீரில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எனவே வாகனங்களில் பயணிப்போர் மாற்றுப் பாதைகளை பயன்படுத்துமாறு போலீசார் அறிவித்துள்ளனர்.
இதன்படி கெபிதிகொல்லாவ, முல்லைத்தீவு பரந்தன், மன்னார் ஊடாக யாழ்ப்பாணத்திற்கு பயணம் செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தவிர நாட்டின் பல்வேறு இடங்களில் ஆறுகள் பெருக்கெடுத்து ஓடுவதாகவும் குளங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
நாட்டின் பல்வேறு இடங்களில் மண் சரிவு குறித்த சிகப்பு எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக புகையிறத போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.