ஆவணங்கள் இன்றி அமெரிக்காவிலிருந்து விமானத்தில் பிரான்ஸ் சென்ற பெண் பயணியொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்காவின் நியூயோர்க் விமான நிலையத்திலிருந்து பிரான்ஸின் பாரிஸ் விமான நிலைத்தை சென்றடைந்த விமானத்தில் குறித்த பெண் பயணி பயணம் செய்துள்ளார்.
இந்தப் பெண் விமான நிலையங்களில் பாதுகாப்பு சோதனைகளை தாண்டி ஆவணங்கள் இன்றி, பிரான்ஸிற்கு பயணம் செய்தமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் டெல்டா விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான விமானமொன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அதிர்ச்சிகரமான பாதுகாப்பு விதிமீறல் சம்பவம் இதுவெனத் தெரிவிக்கப்படுகின்றது.
விமானத்தில் ஏறுவதற்கு முன்னதாக இரண்டு இடங்களில் ஆள் அடையாள சோதனை மற்றும் போர்டிங் பாஸ் ஆவணங்கள் பரிசோதனை செய்யப்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
விமானம் புறப்படும் போது குறித்த பெண் விமானத்தின் கழிப்பறையில் மறைந்திருந்தார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
பிரான்ஸில் விமானம் தரையிறக்கப்பட்டதன் பின்னர் அந்நாட்டு பொலிஸார் விமானத்திற்குள் பிரவேசித்து குறித்த பெண் பயணியை கைது செய்துள்ளனர்.