உக்ரேனின் மின்சார நிலையங்கள் மீது ரஷ்யா, பாரிய தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்த தாக்குதல் காரணமாக சுமார் ஒரு மில்லியன் வீடுகள் மின்சார வசதியின்றி பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மிக முக்கியமான மின்சார உட்கட்டுமான வசதிகளை இலக்கு வைத்து வான் வழியில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
ரஷ்யா இந்த ஆண்டில் உக்ரைன் சக்தி வள நிலையங்கள் மீது நடத்திய 11வது தாக்குதல் இது என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவில் உற்பத்தி செய்யப்பட்ட ஏவுகணைகளைக் கொண்டு ரஷ்யா மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு பதிலடியாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் தெரிவித்துள்ளார்.
கசகஸ்தானில் நடைபெற்று வரும் பாதுகாப்பு மாநாட்டில் அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.
மேலும் கடந்த இரண்டு நாட்களில் உக்கிரைனின் மீது ரஷ்யா 100 ஏவுகணைகளையும் 466 ட்ரோன்களையும் கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளதாக புட்டின் தெரிவித்துள்ளார்.
தீர்மானம் மேற்கொள்ளும் நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என அவர் மேலும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதேவேளை, உக்ரேனின் சக்தி வள நிலையங்கள் மீது பாரிய தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக உக்கிரேன் தெரிவித்துள்ளது.