சீரற்ற காலநிலை காலநிலை காரணமாக உயர்தர பரீட்சைகள் மீளவும் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி ஏற்கனவே மூன்று நாட்கள் கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சைகள் ஒத்திவைக்கப்பட்டு இருந்தன.
தற்பொழுது மேலும் 3 நாட்களுக்கு பரீட்சைகள் ஒத்திவைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி கல்வி பொது தராதர உயர்தர பரீட்சை எதிர்வரும் டிசம்பர் மாதம் நான்காம் திகதி மீண்டும் ஆரம்பிக்கும் என இலங்கை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
பரீட்சை நடத்துவது தொடர்பில் இன்றைய தினம் கொழும்பில் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஊடகங்களுக்கு தகவல் வெளியிட்டு இருந்தார்.
இதன்படி நாட்டில் நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக பரீட்சைகளை நடத்த முடியவில்லை என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜெயசுந்தர தெரிவித்துள்ளார்.