சீரற்ற காலநிலையினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 6 ஆக உயர்வு

Must Read

நாட்டில் நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்டு உயிரிழந்தோர் எண்ணிக்கை
6 ஆக உயர்ந்துள்ளது.

17 பேர் காயங்களுக்கு உள்ளாகியுள்ள நிலையில், காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மோசமான வானிலை காரணமாக நாட்டின் 20 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

அந்த மாவட்டங்களின் 166 பிரதேச செயலாளர் பிரிவுகளில் 80,642 குடும்பங்கள் தற்போது பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

276,550 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 5,305 குடும்பங்களைச் சேர்ந்த 16,553 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

மேலும், 82 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளன. 1,465 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

இதேவேளை, சீரற்ற காலநிலை காரணமாக 17,635 குடும்பங்களைச் சேர்ந்த 59,997 பேர் தமது உறவினர்களின் வீடுகளுக்குச் சென்றுள்ளனர்.

இதேவேளை, நீர்த்தேக்கங்களைச் சூழவுள்ள தாழ்நிலங்களில் வெள்ளம் தொடர்ந்தும் காணப்படும் என நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தந்துரு ஓயா மற்றும் மகாவலி ஆற்றின் நீர் மட்டம் உயர்வதால் வெள்ள நிலைமைகள் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக நீர்ப்பாசன திணைக்களத்தின் நீர்ப்பாசன பொறியியலாளர் ஜி.டபிள்யூ.ஏ.சகுரா தில்தாரா தெரிவித்தார்.

MORE ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ADVERTISEMENT

Contact
info@tamilnews.ch
to advertise here.

LATEST ARTICLES

ADVERTISEMENT

Contact
info@tamilnews.ch
to advertise here.