இளைய சமூகத்தினர் சமூக ஊடகங்களை பயன்படுத்துவதனை தடை செய்ய வேண்டுமென சுவிட்சர்லாந்து மக்கள் கோரியுள்ளனர்.
சுவிட்சர்லாந்தின் முன்னணி ஊடகமொன்று மேற்கொண்ட கருத்துக் கணிப்பு மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
16 வயதுக்கும் குறைந்த இளையவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படக்கூடாது என தெரிவித்துள்ளனர்.
சமூக ஊடகப் பயன்பாட்டுக்கான குறைந்தபட்ச வயதெல்லை 16 ஆக நிர்ணயிக்கப்பட வேண்டுமென கருத்துக் கணிப்பில் பங்குபற்றிய 78 வீதமானவர்கள் தெரிவித்துள்ளனர்.
சமூக ஊடகங்களை பயன்படுத்தும் வயதுக் கட்டுப்பாடுகள் கடுமையான அமுல்படுத்தப்பட வேண்டுமென சில அரசியல் கட்சிகள் தெரிவித்துள்ளன.