சுவிட்சர்லாந்தின் சூரிச் கான்டனில் தானியங்கி பொதுப் போக்குவரத்து சேவை பரீட்சார்த்த அடிப்படையில் முன்னெடுக்கப்பட உள்ளது.
எதிர்வரும் 2025ம் ஆண்டில் இந்த பரீட்சார்த்த முயற்சி மேற்கொள்ளப்பட உள்ளது.
சூரிச் கான்டன் நிர்வாகமும் சூரிச் ரயில் சேவையையும் கூட்டாக இணைந்து இந்த முயற்சியை முன்னெடுக்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
சாரதிகளற்ற தானியங்கி வாகனங்கள் இவ்வாறு சூரிச் கான்டனில் பயன்படுத்தப்பட உள்ளது.
பொதுப் போக்குவரத்து சேவைகளில் இந்த தானியங்கி வாகனங்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
சாரதிகள் இன்றி மென்பொருள் ஊடாக வாகனங்கள் செலுத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.