உலகின் அனேக நாடுகளில் வாகனங்களில் பயணம் செய்வோர் அதிக அளவில் பயன்படுத்தும் ஓர் செயலியாக google மேப்ஸ் செயலி கருதப்படுகின்றது.
நாம் செல்லும் இடத்திற்கான வழியை துல்லியமாக அறிந்து கொள்ளவும் தூரத்தை அறிந்து கொள்ளவும் இந்த மேப்ஸ் பயன்படுத்தப்படுகின்றது.
இந்த நிலையில் அண்மையில் இந்தியாவில் இடம்பெற்ற கோர விபத்து சம்பவம் ஒன்று தொடர்பில் இந்த கூகுள் மேப்ஸ் செயலி குறித்து குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்தியாவின் உத்தர் பிரதேஷ் மாநிலத்தில் அண்மையில் கூகுள் மேப்ஸ் செயலியை பயன்படுத்தி பயணம் செய்த வாகனம் ஒன்று விபத்துக்குள்ளானதில் மூன்று பேர் உயிரிழந்தனர்.
நிர்மாணித்து முடிக்கப்படாத பாலம் ஒன்றில் இந்த வாகனம் பயணித்த காரணத்தினால் விபத்து இடம் பெற்றுள்ளது.
கூகுள் மேப்ஸ் செயலியில் காண்பித்த பாதையை இந்த பாசன சாரதி பயன்படுத்தி பயணித்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.
கூகுள் மேப்ஸின் பிழையான வழிகாட்டலின் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த ஆண்டு ஆரம்பத்தில் குறித்த பகுதியில் ஏற்பட்ட மழை வெள்ளம் காரணமாக பாலம் உடைந்து விட்டதாகவும் பாலம் திருத்தப்படும் முன்னதாகவே குறித்த நபர்கள் இந்த பாலத்தில் பயணம் செய்த காரணத்தினால் விபத்து இடம்பெற்றுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.
கூகுள் மேப்ஸ் பயன்படுத்தும் தரவுகள் எல்லா நேரங்களிலும் இற்றைப்படுத்தப்படாத காரணத்தினால் இவ்வாறு வீதிகளில் ஏற்படக்கூடிய திடீர் மாற்றங்கள் பற்றிய விபரங்கள் உள்ளடக்கப்படுவதில்லை.
இதனால் இவ்வாறான விபத்துக்கள் இடம்பெறுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.