சுவிட்சர்லாந்து தனியார் வங்கி மீது பாரிய நிதிச் சலவை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்து சட்ட மா அதிபர் திணைக்களம் இந்தக் குற்றச்சாட்டை சுமத்தி வழக்குத் தொடர்ந்துள்ளது.
லொம்பார்ட் ஓடியர் (Lombard Odier ) என்ற தனியார் வங்கி மற்றும் அதன் பணியாளர் மீது இவ்வாறு நிதிச் சலவை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
உஸ்பெகிஸ்தானின் முன்னாள் ஜனாதிபதியின் புதல்வி கருப்புப் பணத்தை மறைத்து வைக்க இந்த வங்கி உதவியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
2012 மற்றும் 2015ம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலப் பகுதியில் இந்த மோசடி சம்பவம் இடம்பெற்றுள்ளது என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.