சுவிட்சர்லாந்தின் ரிக்கினோ கான்டனில் இத்தாலிய பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
65 வயதான இத்தாலிய பெண் ஒருவர் ரிக்கினோவின் மோர்பியோ இன்பிரியோர் பகுதியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் இத்தாலிய பிரஜையான 68 வயது நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்த சடலம் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்தப் பெண் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதனால் மேலதிக விபரங்களை வெளியிட முடியாது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.