இலங்கையில் சீரற்ற காலநிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இதுவரையில் சீரற்ற காலநிலை காரணமாக 15 பேர் உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.
நாட்டின் 14 மாவட்டங்களில் சீரற்ற காலநிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த சீரற்ற காலநிலை காரணமாக ஒரு லட்சம் குடும்பங்களைச் சேர்ந்த சுமார் நான்கு லட்சத்திற்கும் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சுமார் பத்தாயிரத்திற்கு மேற்பட்ட குடும்பங்கள் தொடர்ந்தும் பாதுகாப்பான இடங்களில் தங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் 101 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதாகவும் சுமார் 2500 வீடுகள் பகுதி அளவில் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சுமார் ஒரு லட்சத்து 20 ஆயிரம் ஏக்கர் நெல் வயல்கள் முற்றும் முழுதாக சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நட்ட ஈடு வழங்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.