சுவிட்சர்லாந்தில் இலத்திரனியல் கார்களின் பயன்பாடு சுமார் 4 வீதமானவை மட்டுமே என தெரிவிக்கப்படுகிறது.
முழுமையான அளவில் இலத்திரனியல் கார்களின் எண்ணிக்கையை வெறும் நான்கு வீதம் என தெரிவிக்கப்படுகிறது.
சுவிட்சர்லாந்தின் கான்டனுக்கு கான்டன் இந்த இலத்திரனியல் கார்களின் எண்ணிக்கையளவு மாறுபடுவதாக தெரிவிக்கப்படுகிறது.
ஜூரிச்சில் 5.2 வீதமும், வோட்டில் 4.3 வீதமும் இலத்திரனியல் கார்கள் காணப்படுகின்றன.
இதேவேளை, யூரி கான்டனில் வெறும் 2.8 வீதமான இலத்திரனியல் கார்களே காணப்படுகின்றன.
கடந்த ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது இந்த ஆண்டில் இலத்திரனியல் வாகன பதிவுகளும் குறைவாக காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது