பிரிக்ஸ் நாடுகள் புதிய நாணய அலகு ஒன்றை அறிமுகம் செய்தால் 100 வீத வரி விதிக்கப்படும் என அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி டொனால் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
பிரிக்ஸ் அமைப்பில் சீனா, ரஸ்யா உள்ளிட்ட நாடுகள் அங்கம் வகித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க டொலரை ஓரங்கட்டும் வகையில் இந்த நாணயத் தாள் அறிமுகம் செய்யப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அமெரிக்க டொலருக்கு பதிலீடாக வேறும் புதிய நாணய அலகு அறிமுகம் செய்யப்பட்டால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என டிரம்ப் தெரிவித்துள்ளார்.
பிரேஸில், இந்தியா, ரஸ்யா, சீனா, தென் ஆபிரிக்கா உள்ளிட்ட நாடுகள் கடந்த 2011ம் ஆண்டு இந்த அமைப்பினை ஸ்தாபித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த அமைப்பில் இணைந்து கொள்ள பல நாடுகள் ஆர்வம் காட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.