சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த இளம் தலைமுறையினர் அதிகளவில் செயற்கை நுண்ணறிவினைப் (AI) பயன்படுத்துவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
செயற்கை நுண்ணறிவு செயலியான செட்ஜீபிடி போன்றனவற்றை அதிகளவில் இளம் தலைமுறையினர் பயன்படுத்துவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றின் மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த இளம் தலைமுறையினரில் மூன்றில் ஒருபகுதியினர் ஒவ்வொரு வாரமும் இந்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பல்வேறு வழிகளில் பயன்படுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
மரபு ரீதியான தேடுதளங்களை விடவும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்கள் தகவல்களை தேடுவதிலும் திரட்டுவதிலும் செயற்திறனானவை என தெரிவிக்கப்படுகின்றது.