சிரியாவில் இடம்பெற்று வரும் வன்முறைகள் தொடர்பில் சுவிட்சர்லாந்து தனது கரிசனையை வெளியிட்டுள்ளது.
அனைத்து தரப்பினரும் சர்வதேச சட்டங்களுக்கு மதிப்பளிக்கும் வகையில் செயற்பட வேண்டியது அவசியமானது என சுட்டிக்காட்டியுள்ளது.
சிவிலியன்களை பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென கோரியுள்ளது.
வன்முறைகளை கைவிட்டு அரசியல் ரீதியான தீர்வுத் திட்டத்தை எட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென சுவிட்சர்லாந்து அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது.
சிரியாவின் முக்கிய நகரங்கள் மீது கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்கள் நடத்தத் தொடங்கியுள்ளனர்.
சிரிய கிளர்ச்சியாளர்களை கட்டுப்படுத்துவதற்கு ஈரான் மற்றும் ரஸ்யா உதவிகளை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.