சுவிட்சர்லாந்து உள்ளிட்ட நாடுகள் போர் விமானங்களை கொள்வனவு செய்வது தொடர்பிலான தீர்மானத்தை உலகின் முன்னிலை செல்வந்தர்களில் ஒருவரான எலோன் மாஸ்க் விமர்சனம் செய்துள்ளார்.
சுவிட்சர்லாந்து அரசாங்கம் அமெரிக்காவின் f35 என்னும் போர் விமானத்தை கொள்வனவு செய்ய திட்டமிட்டு அதற்கான முனைப்புகளில் ஈடுபட்டுள்ளது.
எனினும் இந்தக் காலத்தில் போர் விமானங்களை கொள்வனவு செய்பவர்கள் முட்டாள்கள் என எலோன் மாஸ்க் தெரிவித்துள்ளார்.
தற்பொழுது ட்ரோன் தொழில்நுட்பம் காணப்படுவதாகவும் இதனால் வான் படை வீரர்களைக் கொண்டு விமானங்களை இயக்கி போர் செய்ய வேண்டிய அவசியம் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ட்ரோன் தொழில்நுட்பம் வளர்ந்துள்ள நிலையில் தட்பொழுதும் சிலர் முட்டாள்தனமாக போர் விமானங்களை கொள்வனவு செய்வதாக அவர் விமர்சனம் செய்துள்ளார்.
ஏற்கனவே F35 போர் விமானங்கள் தொடர்பில் அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பும் விமர்சனங்களை வெளியிட்டிருந்தார்.
இவ்வாறான ஒரு பின்னணியில் எலோன் மஸ்கின் இந்த விமர்சனம் சுவிட்சர்லாந்தின் தீர்மானத்தை கேள்விக்குற்ப்படுத்தி உள்ளது.
சுவிட்சர்லாந்து அரசாங்கம் அமெரிக்காவிடமிருந்து 36 போர் விமானங்களை கொள்வனவு செய்ய திட்டமிட்டுள்ளது.
இதற்காக மொத்தமாக ஆறு பில்லியன் ஸ்விஸ் பிராங்குகள் செலவிடப்பட உள்ளது.
எலோன் மஸ்கின் இந்த விமர்சனம் சுவிட்சர்லாந்தின் ஜனாதிபதி வயோலா ஹம் ஹார்ட்டை பெரும் அழுத்தத்திற்கு உள்ளாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பொருத்தமான மாற்று வழிகளை பின்பற்றாது இன்னமும் போர் விமான கொள்வனவில் கவனம் செலுத்துவதாக பல்வேறு தரப்பினரும் சுட்டிக்காட்டி உள்ளனர்.