சூரிச் விமான நிலையத்தில் கடந்த நவம்பர் மாதம் அதிகளவு விமானப் பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தை விடவும் இந்த மாதம் கூடுதல் விமானப் போக்குவரத்து இடம்பெற்றுள்ளது.
இந்த ஆண்டில் 18884 விமானங்கள், சூரிச் விமான நிலையத்தினை பயன்படுத்தியுள்ளன.
இந்த எண்ணிக்கையானது கடந்த 2023ம் ஆண்டு நவம்பர் மாதத்தை விடவும் 5.1 வீத அதிகரிப்பாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஒக்ரோபர் மாதம் விமானப் பயணங்களில் சரிவு ஏற்பட்ட போதிலும் நவம்பர் மாதம் அதிகளவு விமானப் பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
குறிப்பாக விடுமுறை காலத்தில் அதிகளவான விமானப் பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.