அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தனது மகன் ஹுன்டர் பைடனுக்கு பூரண பொது மன்னிப்பு வழங்கியுள்ளார்.
ஹுன்டர் பைடன் வரி மற்றும் துப்பாக்கி குற்றச் செயல்களுடன் தொடர்பு பட்டிருந்தார் என தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.
இந்த மாதம் பதவியில் இருந்து விடைபெறும் தனது ஜனாதிபதி ஜோ பைடன், அதிகாரத்தை பயன்படுத்தி தனது மகனுக்கு பூரண பொது மன்னிப்பு வழங்கியுள்ளார்.
அது தொடர்பான ஆவணத்தில் அவர் கையெழுத்து இட்டுள்ளார்.
நிபந்தனை அற்ற அடிப்படையில் பூரண மன்னிப்பு வழங்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
தனது நிறைவேற்று அதிகாரத்தை பயன்படுத்தி ஜோ பைடன் இவ்வாறு மகனுக்கு பூரண மன்னிப்பு வழங்கியுள்ளார்.
இந்த தண்டனை விதிப்பு காரணமாக சில சமயங்களில் ஜோ பைடனுக்கு சிறை செல்வதற்கு சந்தர்ப்பம் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும் ஜனாதிபதி மன்னிப்பு வழங்கப்பட்டுள்ள காரணத்தினால் சிறை செல்வதற்கான சாத்தியமில்லை என தெரிவிக்கப்படுகிறது.
ஹுன்டர் பைடனுக்கு எதிரான வழக்கு விசாரணைகளின் தீர்ப்பு அல்லது தண்டனை விதிப்பு எதிர்வரும் 12 ஆம் திகதி மற்றும் 16ஆம் திகதிகளில் அறிவிக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாறான ஒரு பின்னணியில் ஜனாதிபதி ஜோ பைடன் தனது மகனுக்கு பூரண நிபந்தனை அற்ற ஜனாதிபதி பொது மன்னிப்பை வழங்கியுள்ளார்.
எனினும் கடந்த காலங்களில் தான் அதிகாரத்தை பயன்படுத்தி மகனுக்கு மன்னிப்பு வழங்கப் போவதில்லை என கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தனது மகனுக்கு நீதியற்ற முறையில் தண்டனை விதிக்கப்பட்டதாகவும் இதே குற்ற செயல்களை இழைத்த ஏனையவர்களை விட தனது மகனுக்கு தெரிவு செய்யப்பட்ட அடிப்படையில் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகவும் ஜோ பைடன் குறிப்பிட்டுள்ளார்.
எனவே தாம் அவருக்கு பொது மன்னிப்பு வழங்குவதாக அறிவித்துள்ளார்.