அதிகாரப்பூர்வ வாகனங்கள் தேவையில்லை என தாம் ஒருபோதும் கூறவில்லை என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
தேசிய மக்கள் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற சிற்றுண்டி சாலையில் உணவு உட்கொள்ளப் போவதில்லை என கூறியதில்லை என்று அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.
நாடாளுமன்றில் வழங்கப்படும் உணவும் சந்தையில் உணவுப் பொருட்கள் விற்பனை செய்யும் அதே விலையில் விற்பனை செய்யப்பட வேண்டும் என்பதே தமது கோரிக்கை என அவர் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் ஆரம்ப முதலில் இந்த விடயத்தை வலியுறுத்தி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் வழங்கப்படும் உணவு உட்கொள்வதில்லை எனவும் வாகனங்களை பயன்படுத்த போவதில்லை எனவும் தேசிய மக்கள் சக்தியினர் கூறியதாக சிலர் போலி பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீட்டிலிருந்து உணவு கொண்டு வர முடியாது எனவும் உலகின் எல்லா நாடுகளிலும் நாடாளுமன்றில் உணவு வழங்கப்படுவதாகவும் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.