இந்தியாவிற்கும் சுவிட்சர்லாந்திற்கும் இடையில் சுதந்திர வர்த்தக உடன்படிக்கைக்கு சுவிஸ் செனட்சபை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
முதல் தடவையாக இவ்வாறு செனட் சபையில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
செனட் சபையில் இந்த யோசனை முன்வைக்கப்பட்ட போத 41க்கு பூச்சியம் என்ற அடிப்படையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
செனட் சபையில் அங்கீகரிக்கப்பட்ட இந்த யோசனை தேசிய பேரவையில் முன்வைக்கப்பட உள்ளது.
தற்பொழுது இந்தியா சுவிஸ் ஏற்றுமதிகள் மீது கடுமையான வரி விதித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.