உலகில் பெரும் ஆபத்தை ஏற்படுத்திய கோவிட் 19 பெருந்தொற்று ஆய்வுக்கூடம் ஒன்றில் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும் என அமெரிக்கா காங்கிரஸ் சபையின் விசாரணை குழு தெரிவித்துள்ளது.
அமெரிக்க காங்கிரசபையின் விசாரணை குழு ஒன்று இது தொடர்பான அறிக்கையை வெளியிட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று தொடர்பில் விசாரணை நடத்தி இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
கோவிட் 19 வைரஸ் தொற்று ஆய்வு கூடம் ஒன்றில் இருந்து அல்லது ஆய்வு கூட ஆராய்ச்சி தொடர்பான தவறு காரணமாக பரவி இருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.
சுமார் 520 பக்கங்களை கொண்ட அறிக்கையொன்று தயாரிக்க பட்டு வெளியிடப்பட்டுள்ளது.
இந்த ஆய்வானது உலகில் அடுத்த ஒரு பெரும் தொற்று நோய் ஏற்படும் அபாயங்கள் தொடர்பிலும் அதற்கான முன்னெச்சரிக்கையின் நடவடிக்கைகள் தொடர்பிலும் மக்களை தெளிவூட்ட கூடிய வகையில் அமையும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அமெரிக்க தேசிய சுகாதார நிறுவனம் இந்த அறிக்கையின் தகவல்களை வெளியிட்டுள்ளது.
கோவிட் பெருந்தொற்று சீனாவின் வூஹான் மாகாணத்தில் முதல் முதலாக கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த வைரஸ் தொற்று காரணமாக உலகம் முழுவதிலும் சுமார் ஏழு மில்லியன் பேர் உயிரிழந்திருந்தனர்.
உலகப் பொருளாதாரத்திற்கே இந்த கோவிட் தொற்று பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது.
எவ்வாறெனினும், இந்த வைரஸ் தொற்று எந்த ஆய்வு கூடத்திலிருந்து வெளியானது என்பது பற்றிய விபரங்கள் வெளியிடப்படவில்லை.
அமெரிக்க காங்கிரஸ் சபையின் இந்த விசாரணைக் குழுவில் அதிக எண்ணிக்கையிலான உறுப்பினர்கள் குடியரசு கட்சியைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.