ஈ கடவுச்சீட்டு அல்லது இலத்திரனியல் கடவுச்சீட்டு விலை மனு கோரல் தொடர்பில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் கடவுச்சீட்டு உற்பத்திக்காக நிறுவனமொன்றுக்கு ஒப்பதந்தம் வழங்கப்பட்டது.
இந்த இலத்திரன்கள் கடவுச்சீட்டு தயாரிப்பதற்கு எவ்வாறு விலை மனு கோரல் கோரப்பட்டது என்பது தொடர்பில் தேசிய கொள்முதல் குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
சுமார் ஐந்து மில்லியன் கடவுச்சீட்டுகளை கொள்வனவு செய்வதற்காக குறித்த நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டிருந்தது.
இலத்திரனியல் கடவுச்சீட்டு தயாரிப்பது தொடர்பில் நிறுவனத்தை தெரிவு செய்தமை தொடர்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த மனு மீதான விசாரணைகளின் போது சட்டமா அதிபர் திணைக்களம் குறித்த விசாரணை தொடர்பில் அறிவித்துள்ளது.