சுவிட்சர்லாந்தில் பணியிடங்களில் பல்வேறு துன்புறுத்தல்களை எதிர்நோக்க நேரிடுவதாக பணியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அண்மையில் முன்னெடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பு ஒன்றின் போது இந்த விடயம் தெரிய வந்துள்ளது.
அனேகமான பணியாளர்கள் பாலியல் ரீதியான துன்புறுத்தல்களை எதிர்நோக்க நேரிடுவதாக தெரிவிக்கப்படுகிறது.
பாலியல் துஷ்பிரயோகங்கள் மற்றும் ஏனைய துன்புறுத்தல்களை தடுப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தாலும் இந்த துன்புறுத்தல்கள் தொடர்ந்தும் முன் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பாக பெண்கள் இளவயதினர், பயிலுனர்கள் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர் என தெரிவிக்கப்படுகிறது.
பால்நிலை சமத்துவதற்கான மத்திய அலுவலகம் இது தொடர்பான தகவல்களை வெளியிட்டுள்ளது.
இழிவுபடுத்தல்கள், பாலியல் நகைச்சுவைகள் தேவையற்ற சைகைகள், சீண்டல்கள், தகாத வார்த்தை பிரயோகங்கள் என பல்வேறு பணிகளில் இந்த துன்புறுத்தல்கள் இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகிறது.
வாடிக்கையாளர்களுடன் அதிகம் தொடர்பு பேணும் தொழில்துறையைச் சார்ந்தவர்களே அதிக அளவில் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுகின்றனர் என தெரிவிக்கப்படுகிறது.